ஜனவரி 1 முதல் தடுப்பூசி போடாதவர்கள், எதிர்மறை சோதனை முடிவு இருந்தால் மட்டும் வேலையிடங்களில் அனுமதிக்கப்படுவார்கள்

சிங்கப்பூர்: ஜனவரி 1, 2022 முதல், முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட அல்லது கடந்த 270 நாட்களுக்குள் கோவிட்-19 நோயிலிருந்து குணமடைந்த ஊழியர்கள் மட்டுமே வேலையிடங்களுக்கு திரும்ப முடியும். என கோவிட்டுக்கான அமைச்சர் குழு தெரிவித்துள்ளது.

தடுப்பூசி போடப்படாத ஊழியர்கள் வேலையிடத்திற்கு திரும்புவதற்கு முன் கோவிட்-19 சோதனையில் எதிர்மைறை(Negative) முடிவு இல்லை எனில், வே்லையிடத்திற்கு திரும்ப அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது.

இந்த சோதனைகளுக்கான செலவுகளை அவர்கள் தடுப்பூசி போடாதவர்கள் ஏற்க வேண்டும். இந்த சோதனை MOH ஆல் அங்கீகரிக்கப்பட்ட கோவிட்-19 சோதனை வழங்குநரின் முன் நிகழ்வு சோதனையாக (PET) இருக்க வேண்டும்.

மேலும் ஊழியர்கள் வேலையிடத்தில் இருக்க வேண்டிய காலம் வரை செல்லுபடியாகும் சோதனை முடிவாக PET சோதனை முடிவு இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த சோதனை தேவைகள் மருத்துவ ரீதியாக தடுப்பூசி பெற தகுதியற்ற நபர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கும் பொருந்தும். இவர்களுக்கு நிறுவனங்கள், அவர்களின் செயல்திறனை பாதிக்காமல் வீட்டிலிருந்து வேலையை அனுமதிப்பது மற்றும் சோதனைகளின் செலவு பகிர்தல் போன்ற சிறப்பு சலுகைகளை பரிசீலக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தடுப்பூசி போடப்பட்டவர்கள் உட்பட, வீட்டில் இருந்து வேலை செய்ய முடிந்தவர்களுக்கு அது இயல்பு நிலை ஏற்பாடாக நவம்பர் 21ம் தேதி வரை இருக்கும் என்று மனித வள அமைச்சகம் (MOM) தன் முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளது.