விதிகளில் மாற்றம்! | ஏப்ரல் 23 முதல் இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் அனைவரும், அரசாங்கத்தின் பிரத்யேக தங்கும் வசதியில் 21 நாட்கள் தங்க வேண்டும் !!!

சிங்கப்பூர்: இந்தியாவில் கோவிட் பாதிப்புகள் அதிகரித்து வருவதால் சிங்கப்பூர் வரும் அனைத்து பயணிகளுக்கும் பிரத்யேக வசதியில் தங்கும் காலத்தை அதிகரித்ததோடு நீண்ட கால மற்றும் குறுகிய கால பார்வையாளர்களுக்கு முற்றிலும் நுழைவு அனுமதியை நிறுத்தி வைத்துளலளதாக கோவிட்டுக்கான அமைச்சர்கள் குழு வியாழனன்று (ஏப்ரல்.22) தெரிவித்துள்ளது.

வெஸ்ட்லைட் உட்லண்ட்ஸ் தங்குமிடத்தில் அண்மையில் கண்டறியப்பட்ட தொற்றுகள் இந்தியாவிலிருந்து வந்த புதிய வகை கோவிட் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் இந்தியாவில் இருந்து வருபவர்களில் பலர் கட்டுமான, மெரைன் மற்றும் செயல்முறை (CMP) துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களாவார்கள்.

சிங்கப்பூரில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இருந்தும் , கசிவு ஏற்படக்கூடிய ஆபத்து இன்னும் உள்ளது, அப்படி ஏற்பட்டால் தங்குமிடங்களில் மற்றொரு அலை ஏற்படலாம். எனவே இந்தியாவுடனான நமது எல்லை நடவடிக்கைகளை மேலும் கடுமையாக்குவதாக அமைச்சர் குழு கூறியுள்ளது.

ஏப்ரல் 22,, 2359 மணிக்கு பிறகு சிங்கப்பூர் வரும் இந்தியாவுக்கு சமீபத்திய பயண வரலாற்றை கொண்ட அனைத்து பயணிகளும் ஏற்கனவே உள்ள 14 நாள் SHN காலத்தோடு கூடுதலாக 7 நாள் பிரத்யேக வசதியிலேயே தங்க வேண்டும்.

சில தினங்களுக்கு முன் இந்தியாவில் இருந்து வருபவர்கள், கூடுதலான 7 நாட்கள் அவர்கள் சொந்த இடத்தில் தங்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த விதி இப்போது மாற்றப்பட்டுள்ளது.

அவர்கள் சிங்கப்பூர் வந்த பிறகு, கோவிட்-19 பிசிஆர் சோதனைகளுக்கு உட்படுவார்கள். பிறகு SHNல் இருக்கும் போது 14 ம் நாள், மற்றும் அவர்களின் 21ம்நாள் SHN காலம் முடிவதற்கு முன்பு மற்றொரு சோதனையும் செய்யப்படும்.

23 ஏப்ரல் 2021 முதல் 2359 மணிநேரம் முதல், அறிவிப்பு வரும் வரை, கடந்த 14 நாட்களுக்குள் இந்தியாவுக்கு சமீபத்திய பயண வரலாறு கொண்ட அனைத்து நீண்ட கால பாஸ் வைத்திருப்பவர்கள் மற்றும் குறுகிய கால பார்வையாளர்கள் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது.

மேலும் சிங்கப்பூர் வழியாக செல்லவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு முன்னரே ஒப்புதல் பெற்ற அனைவருக்கும் இது பொருந்தும் என கோவிட்டுக்கான அமைச்சர் குழு தெரிவித்துள்ளது.