தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் போட்டிருந்த தங்குமிட தொழிலாளர் ஒருவருக்கு கோவிட் தொற்று

சிங்கப்பூர்: ஏப்ரல் 20ம் தேதி சுகாதார அமைச்சகம் வெளியிட்ட கோவிட் தொற்று பற்றிய அறிக்கையில் 13 பேர வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்றும் ஒருவர் தங்குமிடத்தில் உள்ள தொழிலாளர் என்றும் கூறியிருந்தது. அந்த தங்குமிட தொழிலாளர் தொற்று பற்றிய விவரங்கள் பின் வருமாறு:

35 வயதான ஆண் பங்களாதேஷ் நாட்டவர், ஜூலை 2019 ல் சிங்கப்பூர் வந்த ஒரு வேலை அனுமதி வைத்திருப்பவர் ஆவார். இவர் கட்டுமான மேற்பார்வையாளராக Prosper Environmental & Engineering Pte Ltd என்ற நிறுவனத்தில் பணிபுரிகிறார்,

செம்ப்கார்ப் மரைன் அட்மிரால்டி யார்டில் (60 அட்மிரால்டி சாலை மேற்கு) பணிபுரிகிறார். அவர் வெஸ்ட்லைட் உட்லேண்ட்ஸ் தங்குமிடத்தில் (2 உட்லேண்ட்ஸ் செக்டர் 2) வசிக்கிறார்.

ஏப்ரல் 16ம் தேதி வழக்கமான செய்யப்பட்ட ஸ்வாப் சோதனையில் ஏப்ரல் 18 அன்று அவருக்கு கோவிட் இருப்பதாக தெரிய வந்தது. அவர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு ஆம்புலன்சில் தொற்று நோய்களுக்கான தேசிய மையத்திற்கு(NCID) அனுப்பப்பட்டார்.

ஏப்ரல் 18 அன்று ஒரு தனிப்பட்ட சோதனை செய்யப்பட்டது, அடுத்த நாள் அவரது சோதனை முடிவு கோவிட்-19 பாஸிடிவ் என வந்தது. அவர் ஏப்ரல் 9 அன்கடைசியாக செய்த வழக்கமான சோதனையில் கோவிட் நெகட்டிவ் முடிவு தான் இருந்தது. அவரது் செரோலஜி சோதனை முடிவு பாஸிடிவ் என இருந்தாலும் அவருக்கு புதிதாக தொற்று பாதித்ததாக MOH வகைப்படுத்தியுள்ளது.

மார்ச் 12 அன்று அவர், கோவிட் -19 தடுப்பூசிக்கான முதல் டோஸையும், ஏப்ரல் 13 அன்று இரண்டாவது டோஸையும் பெற்றார். தடுப்பூசியை தொடர்ந்து ஆன்டிபாடிகள் அவருக்கு உருவானதால் இது அவரது செரோலஜி சோதனை பாஸிடிவ் என்ற முடிவுக்கு காரணமாக இருக்கலாம்.

இருப்பினும், தடுப்பூசி முடித்த பின்னர் ஒரு நபர் நோய் எதிர்ப்பு சக்தி முழுவதும் உருவாக சில வாரங்கள் எடுக்கும் என்பதால், தடுப்பூசிக்கு பிறகு அவருக்கு பாதுகாப்பு கிடைப்பதற்கு முன்பு அவருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம்.

அவரது தங்குமிடம் மற்றும் வேலையிட தொடர்புகள் உட்பட அடையாளம் காணப்பட்ட அனைத்து நெருங்கிய தொடர்புகளும் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர், மேலும் அவர்கள் சோதிக்கப்படுஙார்கள் என்று MOH தெரிவித்துள்ளது.