கட்டுமானத்துறையில் பணியாற்றும் உள்ளூர் ஊழியர்களுக்கும் தற்காலிக செவிலியர்களுக்கும் தடுப்பூசி போட முன்னுரிமை !!!

சிங்கப்பூர்: முன்னிலை தொழிலாளர்களை போலவே கோவிட்-19 தடுப்பூசிக்கு தற்காலிக செவிலியர்கள் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களுடன் நெருக்கமாக பணியாற்றும் சிங்கப்பூர் கட்டுமான தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க முடியுமா என்பது பற்றிய எம்பி மரியம் ஜாபரின் கேள்விக்கு சுகாதார அமைச்சு பாராளுமன்றத்தில் பதில் அளித்துள்ளது.

சிங்கப்பூர் கட்டுமானத்துறையில் வெளிநாட்டு ஊழியர்களுடன் அல்லாது, சிங்கப்பூரர்களும் பணியாற்றி வருகின்றனர்.

வெளிநாட்டு கட்டுமான தொழிலாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் பணியாற்றும் சிங்கப்பூர் கட்டுமான தொழிலாளர்களுக்கும் கோவிட்-19 தடுப்பூசிக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

கோவிட்-19 தடுப்பூசி (EC19V) தொடர்பான நிபுணர் குழுவின் பரிந்துரைகளுக்கு இணங்க, தொற்றுநோய்க்கான அதிக ஆபத்து உள்ள பிரிவினருக்கு தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.

மேலும் விரைவாக பரவுவதற்கான ஆபத்து உள்ள வேலைகள் அல்லது அமைப்புகளில் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

பொது சுகாதார நிறுவனங்களின் (PHIs) ஒரு பகுதியாக இல்லாத அல்லதுபதிவு செய்யப்படாத செவிலியர்களுக்கு கோவிட் -19 தடுப்பூசி பெற முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் தனியார் நர்சிங் ஏஜென்சிகள் மூலமாக பணியில் உள்ள செவிலியர்களும், சிங்கப்பூர் நர்சிங் போர்டு (SNB) ஒப்புதல் பெற்ற செவிலியர்களும் அடங்குவர். தொற்றுநோய் காலத்தில் அவர்களில் பலர் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.

(Image source: BCA)