சிங்கப்பூரின் சமீபத்திய தொற்று பாதிப்பில் எந்தெந்த நாடுகளின் வைரஸ் மாறுபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன, MOH விளக்கம்

சிங்கப்பூர்: சமுக தொற்றுகள் அதிகரித்து வரும் நிலையில் சமீபத்திய சமூக தொற்றுகள் எந்தெந்த வைரஸ் மாறுபாடுகளை(variants) கொண்டது என சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

கடந்த வாரத்தில் சமூகத்திற்குள், 60 புதிய வழக்குகளை கண்டுபிடிக்கப்பட்டது. மே மாதம் 3ம் தேதி வரை, B .1.351 தென் ஆப்பிரிக்க மாறுபாடு உள்ள 8 உள்ளூர் வழக்குகள் கண்டறியப்பட்டது

B.1.1.7 UK மாறுபாட்டுடன் 7 உள்ளூர் வழக்குகள், B.1.617.2 இந்திய மாறுபாட்டுடன் 7 உள்ளூர் வழக்குகளும், P1 பிரேசிலிய மாறுபாட்டுடன் 3 உள்ளூர் வழக்குகள், B.1.617.1 இந்திய மாறுபாட்டுடன் 3 உள்ளூர் வழக்குகள், மற்றும் B.1.525 UK2 மாறுபாட்டுடன் 1 உள்ளூர் வழக்கு்ம் கண்டுபிடிக்கப்படது.

கூடுதலாக, B 1.351 தென் ஆப்பிரிக்க மாறுபாட்டுடன் RI16, RI17, RI18 மற்றும் RI20 ஆகிய நான்கு மறு நோய்த்தொற்று வழக்குகளும் இருந்ததாக MOH கூறியுள்ளது.

அனைத்து வழக்குகளையும் தனிமைப்படுத்த தேவையான அனைத்து பொது சுகாதார நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்பட்டுள்ளன.

புதிய வைரஸ் வகைகளின் பரவக்கூடிய தன்மையை கருத்தில் கொண்டு, அவை சிங்கப்பூரில் மேலும் பரவுவதற்கான அபாயத்தை தணிக்க, கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என MOH தெரிவித்துள்ளது.