சிங்கப்பூர் பர்னிச்சர் விற்பனையாளர் Vhive நிறுவனத்தின் கணிணியில் ஊடுருவல், வாடிக்கையாளர் தகவல்கள் கசிந்தன

சிங்கப்பூர்: கடந்த மார்ச் 23, அன்று விஹைவ்(Vhive) பர்னிச்சர் நிறுவனத்தின் சர்வர் ஹேக் செய்யப்பட்டதாக அந்திறுவனம் கூறியுள்ளது.

இது குறித்து விசாரிக்கவும் வாடிக்கையாளர்களின் நலன்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும் காவல்துறை மற்றும் பிற தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் ஒரு முன்னணி தகவல் தொழில்நுட்ப தடயவியல் ஆய்வாளருடன் இணைந்து பணியாற்றி வருவதாக அந்திறுவனம் கூறியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடந்து வருகிறது. வாடிக்கையாளர் பதிவுகள் தரவுத்தளங்களில் சேமிக்கப்பட்டிருந்தது. மேலும் தகவல்கள், பல்வேறு சேர்க்கைகள், வாடிக்கையாளர் பெயர், குடியிருப்பு முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் மொபைல் எண்கள் ஆகியவை சேமிக்கப்பட்டிருந்தன.

அவற்றில் NRIC எண்கள் இல்லை. விஹைவ் வாடிக்கையாளர்களின் NRIC எண்களை சேமிப்பதில்லை. கிரெடிட் கார்டு எண்கள் போன்ற எந்த நிதி தகவலும் மீறப்படவில்லை. மேலும் விஹைவ் மூலம் செய்யப்பட்ட கொள்முதல் தொடர்பான அனைத்து நிதி பதிவுகளும் ஹேக் செய்யப்படாத தனி அமைப்பில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து கொள்வதாகவும், உடனடி உதவி தேவைப்பட்டால் வாடிக்கையாளர்களுக்கோ உதவ தயாராக இருப்பதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. தயவுசெய்து olp@vhive.com.sg என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

(Image credit: Nex)