வெஸ்ட்லைட் வுட்லண்ட்ஸ் தங்குமிடத்தில் தொற்று கண்டறியப்பட்டவர்களில், 5 பேருக்கு கோவிட் மறு தொற்றாக இருக்கலாம் என மதிப்பீடு !!!

சிங்கப்பூர்: வெஸ்ட்லைட் வுட்லண்ட்ஸ் தங்குமிடத்தில் மொத்தம் 27 குணமடைந்த தொழிலாளர்களில் 5 பேருக்கு கோவிட் மறு தொற்றாக இருக்கலாம் என்று சுகாதார அமைச்சகம் (MOH) நேற்று்(ஏப்ரல்.30) வெளியிட்ட ஊடக அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

27 வழக்குகளில், 20 வழக்குகள் பழைய நோய்த்தொற்றுகளின் வைரஸ் துண்டுகளை சிதறடிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது..

மேலும் ஐந்து வழக்குகள் கோவிட்-19 மறு தொற்று வழக்குகளாக இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

மறு சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், இரண்டு பேருக்கு கோவிட் இல்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐந்து மறு தொற்று வழக்குகளும், வழக்கு எண் 62181 மற்றும் 62225 ன்னுடன் ஒரே அறையில் வசித்தவர்கள்.

தொற்று உறுதியானவுடன் தங்குமிடத்திலும் வேலையிடத்திலும் இந்த வழக்குகளின் நெருங்கிய தொடர்புகள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதுவரை செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையில், குணமடைந்த தொழிலாளர்களிடையே காணப்பட கோவிட் பாஸிடிவ் வழக்குகள், பழைய தொற்றுகளாக இருக்கலாம் என மதிப்பிடப்படப்பட்டுள்ளது.

(Image source: Google nap)