சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பன்றியின் ரத்த கட்டியை விற்பனை செய்த பெண்ணுக்கு S$8,000 அபராதம்.!!
சிங்கப்பூர்: சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பன்றியின் ரத்த கட்டியை வைத்திருந்ததற்காக யுவான் யிபான் என்ற பெண்ணுக்கு நேற்று நீதிமன்றத்தில் S$8,000 அபராதம் விதிக்கப்பட்டதாக சிங்கப்பூர் உணவு முகமை(SFA) தெரிவித்துள்ளது.
21 ஜனவரி 2021 அன்று, சிங்கப்பூர் உணவு நிறுவனம் (SFA), யுவானின் வீட்டில் இருந்து சுமார் 30 கிலோ பன்றி இரத்தத் கட்டியை கைப்பற்றியது. SFA விசாரணையில் யுவான் ஆன்லைனில் பன்றி ரத்தப் பொருட்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
பன்றி இரத்தம் போன்ற விலங்குகளின் இரத்த உணவுப் பொருட்கள் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை எளிதாக்கும். இரத்தத்தை சுகாதாரமற்ற முறையில் எடுப்பது உணவில் பரவும் நோய்க்கிருமிகளை இரத்த உணவு பொருட்களில் உட்புகுவதற்கும் வழிவகுக்கும்.
அறியப்படாத இடங்களில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள் உணவுப் பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்தும். சிங்கப்பூரில், உணவு இறக்குமதிகள் SFA இன் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
உரிமம் பெற்ற இறக்குமதியாளர்களால் மட்டுமே உணவை இறக்குமதி செய்ய முடியும், மேலும் ஒவ்வொரு சரக்கும் அறிவிக்கப்பட்டு சரியான இறக்குமதி அனுமதியுடன் இணைக்கப்பட வேண்டும் என்று சிங்கப்பூர் உணவு முகமை (SFA) கூறியுள்ளது.
(Image credit: SFA)