சிங்கப்பூரில் உள்ள சீனத் தூதரகத்துக்கு வெளியே போராட்டம் நடத்தியதாகக் கூறப்படும் பெண்ணிடம் காவல்துறை விசாரணை..!!

சிங்கப்பூர்: அனுமதியின்றி போராட்டத்தில் பங்கேற்றதற்காக 32 வயது பெண் ஒருவர் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக சிங்கப்பூர் காவல்துறை நேற்று (நவம்பர் 29) தெரிவித்துள்ளது.

காவல்துறையின் அறிக்கையீல், சிங்கப்பூரர் பெண் நவம்பர் 28ம் தேதி (திங்கள் கிழமை) டேங்க்லின்்சாலையில் உள்ள சீனத் தூதரகத்திற்கு வெளியே சீனாவில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஒரு போராட்டத்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது,

அந்த பெண்ணை போராட்டத்தை நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும், அவர் அதற்கு இணங்கினார் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது

சிங்கப்பூரில் காவல்துறை அனுமதியின்றி பொதுக் கூட்டம் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்வது அல்லது பங்கேற்பது பொது ஒழுங்குச் சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்பதை காவல்துறை மக்களுக்கு நினைவூட்ட விரும்புகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஸ்வீடிஷ் ஸ்போர்ட்ஸ் அமைப்பான அலையன்ஸின் அணியின் உரிமையாளரும் தலைமை வியூக அதிகாரியாக கெல்லி ஓங் என்ற அந்தப் பெண் உள்ளார் என யாஹூ செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

(Image credit:Yahoo)