சிங்கப்பூர்: வேலை இடங்களில் ஏற்படும் காயங்கள் 25% குறைந்தன, உயிரழப்புகள் குறையவில்லை: MOM

2020 ம் ஆண்டின் முதல் பாதியில் வேலை இடங்களில் ஏற்படும் காயங்கள் கிட்டத்தட்ட 25% குறைந்துவிட்டதாக மனித வள அமைச்சு திங்களன்று ஒரு ஊடக வெளியீட்டில குறிப்பிட்டுள்ளது.

கடந்த வருடம் 2019 முதல் அரையாண்டில் 6630 ஆக இருந்த எண்ணிக்கை 2020 முதல் அரையாண்டில் 4996 ஆக குறைந்துள்ளது. இது சர்க்யூட் பிரேக்கர் காலத்தில் சில வேலைகள் நிறுத்தப்பட்டதன் காரணமாக இருக்கலாம் என்றும் இருந்தபோதிலும், இறப்புகளின் எண்ணிக்கை குறையவில்லை என்றும் MOM கூறியுள்ளது.

2020 முதல் பாதியில் 16 உயிரழப்புகள் ஏற்பட்டுள்ளன, இது 2019 ம் ஆண்டு முதல் பாதியில் 17 ஆகவும் 2018 முதல் பாதியில் 18 ஆகவும் இருந்தன. உயரத்திலிருந்து விழும் சம்பவங்களும் மற்றும் வாகனம் தொடர்பான சம்பவங்களும் உயிரழப்புகளுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

இயந்திரம் தொடர்பான சம்பவங்கள் பெரிய மற்றும் சிறிய காயங்களுக்கு இரண்டாவது பொதுவான காரணமாக இருக்கின்றன. 2020 முதல் பாதியில் 29 இயந்திரங்கள் தொடர்பான பெரிய காயங்கள் ஏற்பட்டன, 2019 முதல் பாதியில் இது 44 ஆக இருந்தது என கூறப்பட்டுள்ளது.

சர்க்யூட் பிரேக்கரை நீக்கியதால், இணைய வழி கருத்துரையாடல் மற்றும் பிரச்சாரங்கள் மூலம் கோவிட்-19 மற்றும் வேலையிட விபத்துக்கள் இரண்டிலிருந்தும் பாதுகாப்பை உறுதி செய்ய வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார கவுன்சில் ஆகியவை சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்களை ஈடுபடுத்தி வருகின்றன என MOM கூறியுள்ளது.

பாதுகாப்பஉ இல்லாத நடைமுறைகளை கொண்ட நிறுவனங்களுக்கு வணிக ரீதியான தாக்கத்தை கூர்மைப்படுத்த WSH 2028 யுக்திகளையும் பரிந்துரைகளையும் MOM படிப்படியாக செயல்படுத்தும். இவை பின்வருமாறு:

செப்டம்பர் 1, 2020 முதல் மருத்துவ விடுப்பு அல்லது லேசான வேலைகளுக்கு தொழிலார்களை மாற்ற காரணமான அனைத்து வேலையிட விபத்துகளையும் முதலாளிகள் தெரிவிக்க வேண்டும்.

2020 நான்காம் காலாண்டில் இருந்து கட்டுமானத் துறையிலிருந்து தொடங்கி நிறுவனங்களின் WSH செயல்திறனை வெளியிடுதல்

பாதுகாப்பு இல்லாத ஒப்பந்தக்காரர்களை அனைத்து பொது கட்டுமான டெண்டர்களிலிருந்தும் தகுதி நீக்கம் செய்வதற்கான அளவுகோல்களை அறிமுகப்படுத்துதல்

வரவிருக்கும் மாதங்களில் அதிகமான மக்கள் பணிக்கு திரும்பவுள்ளதால், முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும், விழிப்புடனும் இருக்குமாறு MOM மற்றும் WSH கவுன்சில் கேட்டுக்கொள்வதாக கூறப்பட்டுள்ளது.

((Image credit: AWG)