40 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்து தொழிலாளர் மரணமடைந்தது போன்ற சம்பவங்களை எப்படி தடுக்கலாம்? WSH விளக்கம்

சிங்கப்பூர்: ஜூன் 10 அன்று, ஒரு தொழிலாளி கட்டுமான கிடங்கின் மாடியில் உள்ள இடைவெளி வழியாக 40 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்து மரணமடைந்தது பற்றி வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார கவுன்சில்(WSH) கூடுதல் தகவல்களை வெளியிட்டுள்ளது.

25 வயதான பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த அந்த தொழிலாளி கட்டமைப்பை கடக்கும்போது இடைவெளியை மறைக்க பயன்படுத்தப்படும் அமைப்பு வழியாக கீழே விழுந்தார். இது போன்ற விபத்துகளை பின்வரும் நடவடிக்கைகள் மூலம் தடுக்கலாம்:

தொழிலாளர்கள் கட்டமைப்பின் வழியாக கடப்பதை தடுக்க கட்டமைப்புகளின் அனைத்து பக்கங்களையும் அடைக்க வேண்டும்.

தொழிலாளர்களை எச்சரிக்க விழும் அபாயத்தினை குறிக்கும் கட்டமைப்புகளுக்கு அருகில் எச்சரிக்கை அறிவிப்புகள் வைக்கப்பட வேண்டும்.

தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான பாதையில் செல்லுமாறும் ஆபத்தான பகுதிகள் இருப்பதை பற்றியும் அவர்களுக்கு அறிவுறுத்துங்கள்.

ஒவ்வொரு தொழிலாளியையும் உயரத்தில் பணிபுரியும் போது விழுவதை தடுக்கும் பாதுகாப்பு உபகரணங்களுடன் அவர்கள் நங்கூரமிட்டுள்ளனர் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

தொழிலாளர் விழுந்த இடைவெளி

உயரத்தில் அபாயகரமான வேலைகள் செய்யும் போது விழுவதை தடுக்கும் திட்டம் (FPP) மற்றும் வேலை செய்ய அனுமதி (PTW) அமைப்பு ஆகியவற்றை நிறுவ வேண்டும்.

FPP மற்றும் PTW அமைப்பை நிறுவுவது பற்றிய கூடுதல் தகவலுக்கு, உயரத்தில் பாதுகாப்பாக வேலை செய்வதற்கான WSH கவுன்சிலின் பயிற்சி நெறிமுறையை பார்க்குமாறு WSH கவுன்சில் கூறியுள்ளது.