விடுமுறை காலம் வரவுள்ளதால் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் வேலையிட பாதுகாப்பில் தொடர்ந்து விழிப்ப்புடன் இருக்க வேண்டும் – WSH council

சிங்கப்பூர்: விடுமுறை காலம் வருவதால் அனைத்து நிறுவனங்களும் தொழிலாளர்களும் விழிப்புடன் இருக்குமாறும் வேலையிட பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்குமாறும் வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார கவுன்சில் (WSH) கேட்டுக்கொண்டுள்ளது

ஆண்டு இறுதி பண்டிகை மற்றும் சீனப் புத்தாண்டு காலம் நெருங்கி வருவதால், ஊழியர்கள் விடுப்பு எடுப்பதற்கு முன்னதாக வேலை நடவடிக்கைகளை அதிகரிக்க நிறுவனங்கள் அழுத்தம் கொடுக்கலாம்.

இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 42 வேலையிட மரணங்கள் நடந்துள்ளன. இந்த எண்ணிக்கை 2021 ம் ஆண்டு முழுவதும் பதிவு செய்யப்பட்ட 37 இறப்புகளையும், 2019 ல் கோவிட்-19 பாதிப்புக்கு முன்பு 39 இறப்புகளையும் விட அதிகமாகும்.

செப்டம்பர் 1, 2022 அன்று மனிதவள அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட உயர்ந்த பாதுகாப்புக் காலத்தை பாதியிலேயே முடிக்கப்பட்டது.

நிறுவனங்கள் வேலையைத் தொடங்குவதற்கு முன்பு எப்போதும் தங்கள் இடர் மதிப்பீடுகளைச் செய்ய வேண்டும், WSH நடைமுறைகள் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மதிப்பாய்வு செய்ய வேண்டும்.

மேலும் உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை தவறாமல் சரிபார்த்து பராமரிக்க வேண்டும். தொழிலாளர்களுடன் தொடர்பு கொண்டு, பாதுகாப்பான வேலை நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த வேண்டும் என்று WSH அறிவுறுத்தியுள்ளது.

உங்கள் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ள நேரம் ஒதுக்குமாறும் www.taketimetotakecare.sg என்ற இணையத்தில் மேலும் விவரங்களை அறியலாம் என்றும் WSH தெரிவித்துள்ளது

(Image credit: WSH council)