சிங்கப்பூர் பொது மருத்துவமனை (SGH) வார்டுகளில், இருபது நிமிடங்களுக்கும் மேலாக இருக்கும் பார்வையாளர்களுக்கு ART சோதனை !!!

சிங்கப்பூர்: நேற்று (ஜூன்.20) முதல், சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் (SGH), 20 நிமிடங்களுக்கும் மேலாக வார்டில் இருக்கும் பதிவு செய்யப்பட்ட பராமரிப்பாளர்களும் பார்வையாளர்களும், மருத்துவமனையில் உள்ள ART மையத்தில் கோவிட்-19 ஆன்டிஜென் விரைவு சோதனைக்கு (ART) உட்படுத்தப்பட வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது

ART சோதனை ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும், ஏனெனில் சிங்கப்பூர் படிப்படியாக 3 ம் கட்டத்தற்குள் செல்கிறது.

பார்வையாளர்கள் நுழைய அனுமதிக்கப்படுவதற்கு முன்பு எதிர்மறை முடிவு வந்திருக்க வேண்டும்.

20 நிமிடங்களுக்கு மேல் தங்காத பார்வையாளர்கள் ART க்கு செல்ல தேவையில்லை.

சோதனை முடிவுகள் அவர்கள் பார்வையிடும் நாளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். சோதனைக்கு பணம் செலுத்த தேவையில்லை.

மாற்றாக, பார்வையாளர்கள் கடந்த 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட PCR சோதனையின் முடிவையும் காட்டலாம். மேலும் சுய பரிசோதனை கிட் முடிவு ஏற்றுக்கொள்ளப்படாது என கூறப்பட்டுள்ளது.

புதிதாக அனுமதிக்கப்படும் நோயாளியிடம் அல்லது பராமரிப்பாளருடன் மருத்துவமனை ஊழியர்கள் ART பற்றிய கூடுதல் தகவல்களை பகிர்ந்து கொள்வார்கள்.

மருத்துவமனையில் இருக்கும் உள் நோயாளிகளுக்கு நியமிக்கப்பட்ட பராமரிப்பாளர், ART பற்றிய தகவலுடன் ஒரு SMS யை பெறுவார்.

ஆன்டிஜென் ரேபிட் டெஸ்ட் (ART) மையம், போயர் பிளாக், 11 மூன்றாம் மருத்துவமனை அவென்யூ, சிங்கப்பூர் 168751 என்ற முகவரியில் தினமும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் என SGH மருத்துவமனை தெரிவித்துள்ளது.