BCCI, 2021ம் ஆண்டுக்கான வீரர் ஒப்பந்தங்களை அறிவித்தது, A+ ஒப்பந்த பட்டியலில் உள்ள மூன்று வீரர்களுக்கு ₹7 கோடி சம்பளம்!!!

இந்தியா கிரிக்கெட் அணிக்கான, அக்டோபர் 2020 முதல் செப்டம்பர் 2021 வரையிலான காலப்பகுதிக்கு, வருடாந்திர வீரர் ஒப்பந்தம் மற்றும் சம்பள விவரங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வியாழக்கிழமை (ஏப்ரல்.15)அறிவித்தது.

பிசிசிஐ செய்திக்குறிப்பின்படி, A + பிரிவு ஒப்பந்தத்தில் உள்ள வீரர்களுக்கு 7 கோடியும், A பிரிவில் உள்ள வீரர்களுக்கு ₹ 5 கோடியும், B பிரிவில் உள்ள வீரர்களுக்கு ₹ 3 கோடியும், மற்றும் C பிரிவில் உள்ள வீரர்களுக்கு ₹ 1 கோடியும் சம்பளமாக மேற்குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கப்படும்.

மொத்தம் 28 கிரிக்கெட் வீரர்களுக்கு நான்கு பிரிவுகளில் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. ஏ + பிரிவு பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோஹித் சர்மா, வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் உள்ளனர்.

அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, சேதேஸ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ரிஷாப் பந்த் மற்றும் ஹார்டிக் பாண்ட்யா ஆகியோர் A பிரிவு ஒப்பந்தத்தின் கீழ் வைக்கப்பட்டனர்.

விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா, வேகப்பந்து வீச்சாளர்கள் உமேஷ் யாதவ், புவனேஷர் குமார், மற்றும் ஷார்துல் தாக்கூர் மற்றும் தொடக்க பேட்ஸ்மேன் மயங்க் அகர்வால் ஆகிய மூவரும் B பிரிவு ஒப்பந்தத்தின் கீழ் வைக்கப்பட்டனர்.

குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, தீபக் சாஹர், சுப்மான் கில், ஹனுமா விஹாரி, ஆக்சர் படேல், ஸ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுட்னர், யுஸ்வேந்திர சாஹல் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் C பிரிவு ஒப்பந்தத்தின் கீழ் வைக்கப்பட்டனர். ஆல்ரவுண்டர் கேதர் ஜாதவ் இந்த முறை மத்திய ஒப்பந்தத்தை வழங்கவில்லை.

(Image credit: Hindustan Times)