கிரிக்கெட்:இங்கிலாந்துக்கு எதிரான T20 இறுதி போட்டியில் இந்தியா வென்று தொடரையும் கைப்பற்றியது !!!

இங்கிலாந்துக்கு எதிரான 5 வது T20 போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்று தொடரையும் 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.

முதல் நான்கு போட்டகளில் ஒவ்வொரு அணியும் இரண்டு போட்டியில் வெற்றி பெற்றிருந்தன. 5 வது போட்டியில் வெல்லும் அணியே தொடரை் வெல்லும் என்பதால் இரு அணிகளுமே சம பலத்துடன் விளையாடின.

முன்னதாக இங்கிலாந்து கேப்டன் எயோன் மோர்கன் டாஸ் வென்று பந்து வீசத் தெரிவு செய்ததை அடுத்து, 20 ஓவர்களில் இந்தியா 224/2 ரன்கள் எடுத்தது. ரோகித் அதிரடியாக ஆடி 64 ரன்கள் எடுத்தார், விராட் கோலி 80 (52 பந்துகளில்) ஆட்டமிழக்காமல் இருந்தார். சூர்ய குமார் யாதவ் 32 ரன்களையும் பாண்டிய 39 ரன்களையும் அதிரடியாக ஆடி சேர்த்தனர்.

வெற்றி பெற 225 ரன்கள் தேவை என்ற இமாலய இலக்கை அடைய இங்கிலாந்தின் டேவிட் மாலன்-ஜோஸ் பட்லர் ஜோடி அடித்து ஆடி கொண்டிருந்தது. அப்போது பட்லர் விக்கெட்டை வீழ்த்தியதோடு ஜேசன் ராயை 0 ரன்களுக்கு அவுட் செய்தார் இந்தியாவின் பந்துவீச்சு நட்சத்திரம் புவனேஷ்வர் குமார்.

இங்கிலாந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்தது, மேலும் 20 ஓவர்களில் 188/8 மட்டுமே எடுக்க முடிந்தது.

முக்கிய 2 விக்கெட்டுகளை வீழ்த்தி 4 ஒவர்களுக்கு 15 ரன்களை மட்டும் விட்டு கொடுத்த புவனேஸ்குமார் ஆட்ட நாயகன் விருதை பெற்றார். கேப்டன் விராட் கோலி தொடர் நாயகன் விருதை பெற்றார்.

(Image source: BCCI)