கிரிக்கெட்: இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரையும் வென்றது இந்தியா !!!

நேற்று ( மார்ச்.28), ஞாயிற்றுக்கழமை நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

முதலில் ஆடிய இந்தியா 329 ரன்களுக்கு 48.2 வது ஒவரில் ஆட்டமிழந்தது. ரிஷப் பண்ட் 78 ரன்களும், சிக்கர் தவன் 67 ரன்களும், ஹார்டிக் பாண்டியா 64 ரன்களும் எடுத்தனர்.

ஒரு கட்டத்தில் இந்தியா 400 ரன்களை தொடலாம் என்ற நிலை இருந்தது, ஆனால் விக்கெட்டுகள் தொடர்ந்து விழுந்ததால் பெரிய இலக்கை இந்திய எட்ட முடியவில்லை.

330 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று ஆட தொடங்கிய இங்கிலாந்தின் இரண்டு முக்கிய விக்கெட்டுகளான ஜானி பேர்ஸ்டோ, ஜேசன் ராய் ஆகியோரை் தொடக்கத்திலேயே புவனேஷ்குமார் ஆட்டமிழக்க செய்தார்.

பிறகு மலான், லிவிங்க்ஸ்டன், பட்லர், மொயீன் அலி, ஆகியோர் ரன்கள் சேர்த்தாலும் அவர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். ரஷீட், சேம் கரன் ஜோடி கடைசி நேரத்தில் அதிக ரன்களை சேர்க்க ஆட்டம் பரபரப்பானது. பிறகு ரஷீட் கோலி பிடித்த சூப்பரான கேட்ச்சில் அவுட் ஆனார்.

ஆனால் மார்க் வுட், சேம் கரன் ஜோடி மீண்டும் தொடர்ந்து ரன்களை சேர்க்க இங்கிலாந்து வெற்றி பெறும் வாய்ப்பு இருந்தது. பிறகு மார்க் வுட் ஆனார்.

நடராஜனை பாராட்டிய கேப்டன் கோலி

கடைசி ஓவரில் 14 ரன்கள் எடுத்தால் இங்கிலாந்து வெற்றி பெறலாம் என்ற நிலையில் தமிழக வீரர் நடராஜன் கடைசி ஓவரை வீசினார். கடைசி் ஒவரில் 7 ரன்களை மட்டுமே இங்கிலாந்து பெற முடிந்தது. நடராஜன் கடைசி ஓவரில் ரன்களை அதிகம் விடாமல் சரியாக பந்து வீசி இந்தியா வெற்றி பெற உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3-1, T20 தொடரில் 3-2, ஒரு நாள் தொடரில் 2-1 என்று வெற்றி பெற்று மூன்று வகையான கிரிக்கெட்டிலும் இந்தியா சாம்பியன் ஆனது குறிப்பிடத்தக்கது.

(Image source: BCCI)