தேர்தலுக்கு பிந்தைய இழுபறிக்கு பிறகு அன்வார் இப்ராஹிம் மலேசியப் பிரதமராக நியமிக்கப்பட்டதாக மலேசிய மன்னர் அறிவிப்பு..!!

மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று (நவம்பர்.24) பிரதமராக நியமிக்கப்பட்டதாக மலேசியாவின் சுல்தான் அரண்மனை அறிவித்துள்ளது.

அன்வார் இப்ராகிம் மலேசிய நேரப்படி மாலை 5 மணிக்கு பதவியேற்பார் என்று மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா கூறினார்.

திரு இப்ராஹிம் அங்கம் வகித்த கூட்டணி 82 இடங்களுடன் சில தினங்களுக்கு முன் நடந்த தேர்தலில் முன்னிலை வகித்தது. எவ்வாறாயினும், பெரும்பான்மைக்கு தேவையான 112 எண்ணிக்கையை அது பெறாத்தால், ஒரு தொங்கு பாராளுமன்றத்திற்கு வழிவகுத்தது,

முன்னாள் பிரதமர் முகைதின் யாசினின் வலதுசாரி தேசியக் கூட்டணி 73 இடங்களை வென்றது, அதன் கூட்டணிக் கட்சியான பான்-மலேசிய இஸ்லாமியக் கட்சி 49 இடங்களைப் பெற்று மிகப்பெரிய தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு (UMNO) தலைமையிலான நீண்டகால ஆளும் கூட்டணி திரு அன்வார் இப்ராஹிமின் கீழ் ஒரு ஐக்கிய அரசாங்கத்தை ஆதரிக்க ஒப்புக்கொண்ட பிறகு முட்டுக்கட்டை தீர்க்கப்பட்டது.

பெரும்பான்மை ஆதரவைப் பெறக்கூடிய வேட்பாளராக திரு அன்வர் இப்ராஹிம் இருப்பார், ஆனால் புதிய அரசாங்கத்தின் விவரங்களைத் தெரிவிக்கவில்லை என்று அரசர் திருப்தி அடைந்ததாக அரண்மனை அறிக்கை கூறியது.