தடையால் ஆஸ்திரேலியாவுக்கு திரும்ப முடியாமல் இந்தியாவில் சிக்கியுள்ள அந்நாட்டு குடிமக்கள் மே 15ம் தேதி முதல் திரும்பலாம் !!!

தீவிரமான கோவிட் பாதிப்புக்குள்ளான இந்தியாவில் தற்போது சிக்கி தவிக்கும் ஆஸ்திரேலிய குடிமக்கள் மே 15 முதல் நாடு திரும்ப முடியும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

மோரிசன் இந்தியாவுக்கு செல்லும் மற்றும் இந்தியாவில் இருந்து விமானங்களை தடைசெய்யும் ஒரு பாதுகாப்பு உத்தரவை விதித்திருந்தார். உத்தரவை மீறினால் அபராதம் மற்றும் சிறைத்தண்டனை என சொல்லப்பட்டிருந்தது.

இந்த விதி பற்றி சட்ட வல்லுனர்கள், வெளிநாட்டவர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் கடும் விமர்சனம் செய்தனர், ஆனால் ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தப்பட்ட மக்களில் கோவிட்-19 நோய்த்தொற்றுகளின் வீதத்தை குறைக்க இது உதவியதாக மோரிசன் கூறினார்.

அமைச்சரவையின் தேசிய பாதுகாப்பு குழு தனது பணியை செய்து முடிக்கும் என்று கூறியுள்ளதால் அந்த தேதிக்கு அப்பால் இந்த தடையை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை என்று கருதுவதாக மோரிசன் கூறினார்.

கோவிட்-19ன் இந்திய மாறுபாடு கண்டறியப்பட்ட 50 வயதுடைய நபரின் வழக்கில் காணாமல் போன தொடர்புகளை கண்டறிய நியூ சஙுத் வேல் மாநில சுகாதார அதிகாரிகள் தொடரந்து முயற்சி செய்து வருகின்றனர் என கூறப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு ஜபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சிலர் சமீபத்தில் ஜபில் தொடர் நிறுத்தப்பட்டதால் நாடு திரும்ப முடியாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

(Image credit: Yahoo)