ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் ஒரே டோஸ் கோவிட் தடுப்பூசிக்கு அமெரிக்காவின் FDA அனுமதி விரைவில் கிடைக்கலாம் !!!
ஜான்சன் & ஜான்சனின் கோவிட்-19 தடுப்பூசிக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) விரைவில் அங்கீகாரம் வழங்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே அனுமதியளிக்கப்பட்டுள்ள மற்ற கோவிட் தடுப்பூசிகளை இரண்டு டோஸ்கள் போட்டுக்கொள்ள வேண்டும். ஆனால் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள கோவிட்-19 தடுப்பூசி ஒரு டோஸ் தடுப்பூசி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைத்தவுடன் கிட்டத்தட்ட 4 மில்லியன் டோஸ் தடுப்பூசியை விநியோகிக்க உள்ளதாக என்று ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த கூடுதல் தடுப்பூசி ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்திற்கு நாடு முழுவதும் தடுப்பூசி போடுவதற்கான இலக்கை அடைய உதவும். அமெரிக்காவில் 500,000 க்கும் அதிகமான உயிர்களை இழந்து பொருளாதாரத்தை வீழ்த்திய தொற்றுநோயை கட்டுப்படுத்த இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் ஒரு டோஸ் தடுப்பூசி பாதுகாப்பாகவும் சோதனைகளில் பயனுள்ளதாகவும் இருப்பதாகவும், இந்த வாரம் விரைவில் அவசரகால பயன்பாட்டிற்கான ஒப்புதலுக்கு அளிக்கப்படலாம் என்றும் FDA கூறியுள்ளது.
இந்நிறுவனம் ஜூன் மாத இறுதிக்குள் 100 மில்லியன் டோஸை அமெரிக்காவிற்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தை கொண்டுள்ளது. அந்த காலவரிசையை துரிதப்படுத்த நிர்வாகம் செயல்பட்டு வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் கோவிட்-19 வழக்குகள், மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் மற்றும் இறப்புக்கள் ஆகியவை குறைந்து வருவதாக சமீபத்திய புள்ளி விவரங்கள் காண்பித்தாலும், அரசு நிர்வாகம் அமெரிக்கர்களை தொடர்ந்து முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும்படி வலியுறுத்துகிறது.
(Image credit: Reuters)