மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டனர்

மியான்மரில் இராணுவ ஆட்சியை எதிர்த்து நடந்த போரட்டங்களை ஒடுக்க மியான்மர் பாதுகாப்பு படையினர் எடுத்த நடவடிக்கையில் சில குழந்தைகள் உட்பட 114 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆயுதப்படை தினத்தன்று நடந்த இந்த கொலைகள் பற்றி மேற்கத்திய நாடுகள் கடுமையாக விமர்சித்துள்ளன. பிரிட்டிஷ் தூதர் டான் சக், பாதுகாப்புப் படைகள் தங்களை இழிவுபடுத்தியுள்ளன என்றும், அமெரிக்க தூதர் வன்முறையை பயங்கரமானது என்றும் கூறினார்.

கரேன் இன சிறுபான்மையினரிடமிருந்து ஒரு ஆயுத குழுவால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் இராணுவ ஜெட் விமானங்களும் வான்வழி தாக்குதல்களை நடத்தின. அதில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டனர் என்று ஒரு சிவில் சமூக குழு தெரிவித்துள்ளது.

மாண்டலேயில் 13 வயது சிறுமி உட்பட குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர், யாங்கோனில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

மாண்டலேயில் இறந்தவர்களில் ஐந்து வயதிற்குட்பட்ட ஒரு சிறுவனும் இருந்ததாக முன்னர் சொல்லபட்டது, ஆனால் பின்னர் சிறுவன் உயிர் பிழைத்திருக்கலாம் என்று முரண்பட்ட தகவல்கள் வந்தன. மத்திய சாகிங் பகுதியில் இறந்தவர்களில் மற்றொரு 13 வயது இளைஞர் ஒருவரும் அடங்குவார்.

இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து கொல்லப்பட்டதாக கூறப்படும் பொதுமக்களின் எண்ணிக்கை சனிக்கிழமையன்று நடந்த இறப்புகளை சேர்த்து 440 க்கும் அதிகமானதாக இருக்கக்கூடும்.

நவம்பர் மாதம் சூகியின் கட்சி வென்ற தேர்தல்கள் மோசடியானது என்று இராணுவம் ஆட்சியை பிடித்ததாக கூறியது, ஆனால் இது நாட்டின் தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டது.

சூ கீ ரகசிய இடத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளார், மேலும் அவரது கட்சியில் உள்ள பல நபர்களும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

(Image credit: Reuters)