இங்கிலாந்து வெளியிட்ட கோவிட் காலத்தில் பயணம் செய்ய பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் சிங்கப்பூர் இடம் பிடித்தது!!!

இங்கிலாந்து வெளியிட்ட, கோவிட் காலத்தில் சர்வதேச பயணத்திற்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் சிங்கப்பூர் இடம் பெற்றுள்ளது.

இதற்கு போக்குவரத்து ஒளி அமைப்பு முறையை இங்கிலாந்து பயன்படுத்துகிறது, வெவ்வேறு வண்ணமும் (சிவப்பு, அம்பர் மற்றும் பச்சை) வெவ்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதை குறிக்கும்.

அடிப்படையில் ஒவ்வொரு நாட்டிற்கும் எந்த கட்டுப்பாடுகள் பொருந்தும் என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். இதில் மக்கள் சுயமாக தனிமைப்படுத்த வேண்டுமா, நீங்கள் இங்கிலாந்து திரும்புவதற்கு முன் ஒரு சோதனை மற்றும் வருகைக்கு பின் தேவைப்படும் சோதனைகள் போன்ற விவரங்கள் இருக்கும்.

அம்பர் வண்ண பட்டியலில் நாடுகள் பயணத்திற்கு ஒப்பீட்டளவில் ஆபத்தானதாக கருதப்படுகின்றன, எனவே கட்டுப்பாடுகள் கடுமையானவை.

சிவப்பு வண்ண பட்டியலில் உள்ள நாடுகளில் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கும். அவற்றில் மிக முக்கியமாக கட்டாய விடுதியில் தனிமைப்படுத்தல் போன்ற கட்டுப்பாடுகள் இருக்கும்.

பச்சை வண்ண பட்டியலில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், புருனே, ஐஸ்லாந்து, பரோயே தீவுகள், இஸ்ரேல், போர்ச்சுகல், தென் ஜார்ஜியா, தெற்கு சாண்ட்விச் தீவுகள், செயிண்ட் ஹெலினா, அசென்ஷன் மற்றும் டிரிஸ்டன் டி சுன்ஹா ஆகிய நாடுகள் உள்ளன.

இந்த நாடுகள் பசுமை பட்டியலில் இருந்தபோதிலும், இங்கிலாந்தில் இருந்து வருபவர்களுக்கு பயண கட்டுப்பாடுகள் கூடுதல் இருக்கலாம், எனவே பயணிகள் அந்த நாடுகளின் தேவைகளை சரிபார்த்து கொள்ள இங்கிலாந்து கேட்டுக்கொண்டுள்ளது.

(Image credit: Oneindia)