சூயஸ் கால்வாயில் காத்திருந்த அனைத்து கப்பல்களும் சென்றதையடுத்து, போக்குவரத்து முழுமையாக சீரடைந்தது !!!

மார்ச் மாதம் கடைசி வாரத்தில் சூயஸ் கால்வாயில் எவர்க்ரீன் என்ற மாபெரும் சரக்கு கப்பல், பாதையில் நின்று போனாதால் செல்ல முடியாத மற்ற அனைத்து கப்பல்களும் சனிக்கிழமையன்று கால்வாய் வழியாக சென்று விட்டன என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

கப்பல் போக்குவரத்து தனிபட்ட போது இருந்த பின்னடைவை (backlog) முடிவுக்கு கொண்டு வந்ததாக கால்வாய் ஆணையம் தெரிவித்துள்ளது.

திங்களன்று எவர்க்ரீன் கப்பல் அகற்றப்பட்டபோது வரிசையில் மொத்தமாக நின்ற 422 கப்பல்களில் கடைசி 61 கப்பல்கள், சனிக்கிழமையன்று முக்கிய வர்த்தக பாதை வழியாக சென்றதாக சூயஸ் கால்வாய் ஆணையம் (SCA) தெரிவித்துள்ளது.

மொத்தத்தில், சனிக்கிழமை கால்வாய் வழியாக 85 கப்பல்கள் செல்லவிருந்தன, இதில் 24 கப்பல்கள் எவர் கிவன் அகற்றப்பட்ட பின்னர் வந்தன, எஸ்சிஏ தெரிவித்துள்ளது.

கப்பல் கால்வாயில் ஆறு நாட்களுக்கு நீர்வழியை போக்குவரத்து தடுக்கப்பட்டதற்கான காரணங்களை அறிய புதன்கிழமை SCA விசாரணையை தொடங்கியது.

விசாரணை சிறப்பாக நடைபெறுகிறது, மேலும் இரண்டு நாட்கள் விசாரணை முடிந்த பின்னர் முடிவுகளை அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

(Image credit: Reuters)